‘மனுஷி’ படத்தின் ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் குறித்து விளக்கம்: சென்சார் போர்டுக்கு ஐகோர்ட் உத்தரவு

இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Jun 4, 2025 - 15:10
 0  3
‘மனுஷி’ படத்தின் ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் குறித்து விளக்கம்: சென்சார் போர்டுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow