‘நாம் இஸ்லாமிய நாடுகள்’ - பாகிஸ்தானின் மத ரீதியான அழைப்பை நிராகரித்த மலேசியா

ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் விவகாரம் எனக்கூறி  ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தூதுக்குழுக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் தடுப்பதற்காக பாகிஸ்தான் எழுப்பிய கோரிக்கையை மலேசியா நிராகரித்ததாக தகவல் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

Jun 4, 2025 - 17:30
 0  2
‘நாம் இஸ்லாமிய நாடுகள்’ - பாகிஸ்தானின் மத ரீதியான அழைப்பை நிராகரித்த மலேசியா

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் விவகாரம் எனக் கூறி ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தூதுக்குழுக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் தடுப்பதற்காக பாகிஸ்தான் எழுப்பிய கோரிக்கையை மலேசியா நிராகரித்துள்ளது.

மத அடையாளத்தைப் பயன்படுத்த முயன்ற பாகிஸ்தான், சஞ்சய் குமார் ஜா தலைமையிலான இந்தியக் குழுவின் அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்யுமாறு மலேசிய அரசு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து, “நாங்களும் இஸ்லாமிய நாடு, நீங்களும் இஸ்லாமிய நாடு, மலேசியாவில் இந்திய தூதுக்குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விடுங்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow