அடுத்து தனுஷ் படம் - உறுதி செய்த ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன்
தனது அடுத்த படம் குறித்து பேசியிருக்கிறார் ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. ’லப்பர் பந்து’ படத்தின் மூலம் இயக்குநராக பரிச்சயம் ஆனவர் தமிழரசன் பச்சமுத்து.

தனது அடுத்த படம் குறித்து பேசியிருக்கிறார் ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. ’லப்பர் பந்து’ படத்தின் மூலம் இயக்குநராக முத்திரைப் பதித்தவர் தமிழரசன் பச்சமுத்து. தனது அடுத்த படத்தில் தனுஷை இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், தகவலாக வெளியாகிவிட்டது. இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனத் தெரிகிறது.
தனது அடுத்த படம் குறித்து தமிழரசன் பச்சமுத்து கூறும்போது, “‘லப்பர் பந்து’ படத்துக்குப் பின் தனுஷை சந்தித்துப் பேசி, அவருக்காக ஒரு கதையை எழுதி வருகிறேன். அவருடைய ரசிகர்களுக்கு மற்றும் மக்களுக்கு பிடித்த வகையில் எழுதி வருகிறேன். அவருடைய இமேஜை மனதில் வைத்துதான் உருவாக்கி வருகிறேன். முந்தைய படத்தை விட இப்படத்துக்கு கடுமையாக உழைத்து வருகிறேன். போன படத்தில் எந்த இடத்தில் எல்லாம் தவறு செய்தோமோ அதை எல்லாம் இதில் சரிசெய்ய முயன்று வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?