நடிகை கடத்தல் வழக்கின் முக்கிய சாட்சி இயக்குநர் பாலசந்திர குமார் காலமானார்
பிரபல மலையாள நடிகை கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டார்

பிரபல மலையாள நடிகை கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டார். 84 நாட்கள் சிறையில் இருந்த அவர், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சுனில்குமார் என்கிற பல்சர் சுனி சேர்க்கப்பட்டுள்ளார். திலீப் 8-வது குற்றவாளி. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய பென் டிரைவ், நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும் அவர் அதை பார்க்கும்போது, அருகில் தான் இருந்ததாகவும் நடிகர் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலசந்திர குமார் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளைக் கொல்ல திலீப், சதித்திட்டம் தீட்டியதாகவும் கூறியிருந்தார்.
What's Your Reaction?