நடிகர் ஷக்தி கபூரை கடத்தி பணம் பறிக்க திட்டம்!

பிரபல இந்தி நடிகர் முஷ்டாக் கான். இவரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டுக்கு அழைத்திருந்தனர்.

Dec 17, 2024 - 02:00
 0  6
நடிகர் ஷக்தி கபூரை கடத்தி பணம் பறிக்க திட்டம்!

பிரபல இந்தி நடிகர் முஷ்டாக் கான். இவரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டுக்கு அழைத்திருந்தனர். அதற்காக ராகுல் சைனி என்பவர் அக்.15-ம் தேதி, ரூ.25 ஆயிரம் முன்பணம் மற்றும் விமான டிக்கெட்டை முஷ்டாக் கானுக்கு அனுப்பினார். இதையடுத்து நவ.20-ம் தேதி மும்பையில் இருந்து டெல்லி வந்த அவரை, விமான நிலையத்திலிருந்து காரில் மீரட்டுக்கு அழைத்துச் சென்றனர். டெல்லி புறநகர் பகுதி சென்றதும் அவரை வலுக்கட்டாயமாக வேறொரு காருக்கு மாற்றினர். ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரை கட்டி வைத்தனர். பின் அவரது வங்கி கணக்கின் பாஸ்வேர்டை மிரட்டிப் பெற்று ரூ.2.2 லட்சத்தை பறித்தனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய நடிகர் முஷ்டாக் கான், பிஜ்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீஸார் கடத்தல் கும்பலை சேர்ந்த சர்தக் சவுத்ரி, சைபுதீன், அசிம், ஷஷாங்க் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow