தொல்லியல் ஆய்வில் ஏஐ
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொல்லியல் துறையில் பல்வேறு ஆய்வுகளுக்கு உலக அளவில் பயன்பட்டு வருகிறது. அதைப் பயன்படுத்துவதற்கு முன் தொல்லியல் ஆய்வாளர்கள் அதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொல்லியல் துறையில் பல்வேறு ஆய்வுகளுக்கு உலக அளவில் பயன்பட்டு வருகிறது. அதைப் பயன்படுத்துவதற்கு முன் தொல்லியல் ஆய்வாளர்கள் அதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஏ.ஐ பயன்பாடு: செயற்கை நுண்ணறிவின் இயந்திரக் கற்றல் (Machine learning), ஆழமாகக் கட்டமைக்கப்பட்ட கற்றல் அல்லது படிநிலைக் கற்றல் (Deep learning), தரவு அறிவியல் (Data Science), தரவுப் பகுப்பாய்வு (Data Analysis), ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு (Generative Artificial Intelligence) உள்ளிட்ட பல்வேறு நுட்பங்கள் - படிமுறைகள் (algorithms) வழியாக இயங்குகின்றன. மேற்குறிப்பிட்ட உள்கூறுகளைக் கற்பதற்கு, அடிப்படையில் பைதன் (Python) போன்ற கணினி நிரல்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
What's Your Reaction?