தெலுங்கில் ‘பாகுபலி’ போல தமிழில் ‘கங்குவா’ - இயக்குநர் சுசீந்திரன் பாராட்டு
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தை ‘பாகுபலி’யுடன் ஒப்பிட்டு தமிழ் சினிமாவின் நேர்த்தியான படைப்பு என இயக்குநர் சுசீந்திரன் பாராட்டியுள்ளார்.

சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தை ‘பாகுபலி’யுடன் ஒப்பிட்டு தமிழ் சினிமாவின் நேர்த்தியான படைப்பு என இயக்குநர் சுசீந்திரன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நேற்று மாலை என் குழந்தைகளுடன் ‘கங்குவா’ படத்தை பார்த்தேன். தமிழ் சினிமாவில் மிகவும் நேர்த்தியான பிரம்மாண்டமான திரைப்படம் இது. எப்படி தெலுங்கில் ‘பாகுபலி’ பிரம்மாண்டமான திரைப்படமோ அதேபோல தமிழில் ‘கங்குவா’. எதற்கு இந்தப் படம் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.
What's Your Reaction?