‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்துக்கு மத்திய பிரதேச அரசு வரி விலக்கு!

விக்கி கவுஷல் நடித்துள்ள ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ பாலிவுட் படத்துக்கு வரி விலக்கு அளித்து மத்திய பிரேதச அரசு உத்தரவிட்டுள்ளது.

Nov 19, 2024 - 17:10
 0  5
‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்துக்கு மத்திய பிரதேச அரசு வரி விலக்கு!

மத்திய பிரதேசம்: விக்ராந்த் மாஸ்ஸி நடித்துள்ள ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ பாலிவுட் படத்துக்கு வரி விலக்கு அளித்து மத்திய பிரேதச அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’. இந்தப் படத்தை தீரஜ் சர்ணா இயக்கியுள்ளார். விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டு உரிமையை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் திட்டமிட்ட அரசியல் பிரச்சார படம் என்ற விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow