அதர்வா முரளியின் டிஎன்ஏவுக்கு 5 இசை அமைப்பாளர்கள்!
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் படம் ‘டி என் ஏ’.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் படம் ‘டி என் ஏ’. இதில் நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் , விஜி சந்திரசேகர், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு காந்த் ஹரிஹரன், சத்ய பிரகாஷ், அனல் ஆகாஷ், பிரவீண் சைவி, சஹி சிவா ஆகிய 5 பேர் இசை அமைத்துள்ளனர்.
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்கர் தயாரித்துள்ள இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. “இரண்டு முதன்மை கதாபாத்திரங்களின் உளவியலும், வாழ்வியலும் தான் இப்படத்தின் பிரதான அம்சம். இருவரும் தினமும் இந்த சமூகத்தால் மன அழுத் தத்துக்கு ஆளாகிறார்கள். காயப்படுத்தப்பட்ட இந்த இருவரும் உணர்வுபூர்வமான தருணத்தில் சந்திக்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது? என்பது கதை” என்றார் நெல்சன் வெங்கடேசன்.
What's Your Reaction?