பிப்.7-ல் மீண்டும் வெளியாகிறது ‘இன்டர்ஸ்டெல்லர்’!

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கி, 2014-ம் ஆண்டு வெளியான அறிவியல் புனைகதை படம், ‘இன்டர்ஸ்டெல்லர்’.

Jan 12, 2025 - 09:15
 0  3
பிப்.7-ல் மீண்டும் வெளியாகிறது ‘இன்டர்ஸ்டெல்லர்’!

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கி, 2014-ம் ஆண்டு வெளியான அறிவியல் புனைகதை படம், ‘இன்டர்ஸ்டெல்லர்’. மேத்யூவ் மெக்கானாகே, அன்னி ஹாத்வே, ஜெஸிகா சாஸ்டைன், பில் இர்வின் உட்பட பலர் நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது.

எதிர்கால கதையைக் கொண்ட இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டு நிறைவானதைக் குறிக்கும் வகையில் கடந்த ஆண்டு டிச.6-ம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆனது. ஆனால், இந்தியாவில் ‘புஷ்பா 2’ காரணமாக ஐமாக்ஸ் உட்பட போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், இந்தப் படம் இந்தியாவில் பிப்.7-ம் தேதி வெளியாகும் என்று வார்னர் பிரதர்ஸ் இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow