தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Apr 4, 2025 - 17:25
 0  4
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்.7-ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சமீபத்தில் கோயிலில் நூறு டிராக்டருக்கும் மேல் மண் அள்ளப்பட்டது. இதனால் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் கோயில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை. அரசு நிதியில் மோசடி செய்யப்பட்டதுடன், கோயிலின் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக பக்தர்கள் அளித்த புகார்கள் விசாரிக்கப்பட்ட போது கோயில் பணிகளை முழுமையாக முடிக்காமல் அரசின் நிதியில் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow