திருமண வரம் அருளும் உடையார்பாளையம் பயற்ணீசுவரர் | ஞாயிறு தரிசனம்
மூலவர்: பயற்ணீசுவரர் அம்பாள்: நறுமலர்பூங்குழல் நாயகி தல வரலாறு: சோழ நாட்டில் சுங்கச்சாவடி வழியாக ஒரு வணிகன் மாடுகளின் மேல் மிளகு ஏற்றிக் கொண்டு வந்தான்.

மூலவர்: பயற்ணீசுவரர் அம்பாள்: நறுமலர்பூங்குழல் நாயகி தல வரலாறு: சோழ நாட்டில் சுங்கச்சாவடி வழியாக ஒரு வணிகன் மாடுகளின் மேல் மிளகு ஏற்றிக் கொண்டு வந்தான். அதை பார்த்த அதிகாரிகள் வரி கேட்டனர். மிளகு மூட்டை என்று சொன்னால் வரி அதிகமாக விதிப்பார்கள் என்று நினைத்து, வணிகன் அதிகாரிகளை நம்ப வைப்பதற்கு, ‘இந்த ஊர் இறைவன் சாட்சியாக இது பயிர் மூட்டைகள்’ என்று கூறி, அதற்கு உண்டான வரியை செலுத்தினான்.
பிறகு வெகு தூரம் சென்று மூட்டைகளை அவிழ்க்கும்போது எல்லாம் பயிராக இருந்தது. தான் சொன்ன பொய்யால்தான் இந்த தண்டனை என்று நினைத்து பழமலைநாத சுவாமியிடம் முறையிட்டான். அப்போது ஓர் அசரீரி குரல்,அவனை மன்னித்துவிட்டதாகவும், இனி பயிர் அனைத்தும் மிளகாக மாறும் எனவும் கூறியது. மிளகைப் பயிறாக மாற்றியதால் சிவபெருமான் பயிறணிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஊர் பத்ராரண்யம், பயறணீச்சுரம், முற்கபுரி என்று அழைக்கப்படுகிறது.
What's Your Reaction?