கோவையின் காவல் தெய்வம்... பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்த கோனியம்மன் தேர்!
கோவையின் காவல் தெய்வமான, கோனியம்மன் கோயிலின் தேரோட்டத் திருவிழா இன்று (மார்ச் 5) நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவை: கோவையின் காவல் தெய்வமான, கோனியம்மன் கோயிலின் தேரோட்டத் திருவிழா இன்று (மார்ச் 5) நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவையின் காவல் தெய்வமான, பெரியகடை வீதியில் அமைந்துள்ள, கோனியம்மன் கோயிலின் தேரோட்டத் திருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டு ஆகியவை நடந்தது. அன்றைய தினத்திலிருந்து தினமும் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் ஆகியவை நடத்தப்பட்டன. தொடர்ந்து தினமும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் சுவாமியின் திருவீதி உலா நிகழ்வுகள் நடந்தன. திருவிழாவின் ஒரு பகுதியாக அம்மனுக்கு திருக்கல்யாணம் நேற்று (மார்ச் 4) நடந்தது. அதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நிகழ்வு இன்று (மார்ச் 5) நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், காலை 5 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார்.
What's Your Reaction?