திறந்தநிலைக் கல்வியை மேம்படுத்த உதவுமா ஏ.ஐ?

மாணவர்களின் கற்றல் ஈடுபாட்டுத் திறன், இடைநிற்றல் இடர் கணிப்பு, செயல்திறன் போக்குகள் ஆகியவற்றை அறிய இயந்திரக் கற்றல் முறை (Machine Learning) உதவுகிறது.

Jun 19, 2025 - 18:05
 0  3
திறந்தநிலைக் கல்வியை மேம்படுத்த உதவுமா ஏ.ஐ?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ) திறந்தநிலைக் கற்றலில் (Open and Distance Learning) சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. உதாரணமாக முன் கணிப்பு பகுப்பாய்வு (Predictive Analytics) கருவி மூலம் கல்வியில் பின்தங்கி இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தக்க ஆலோசனை வழங்கப் பயன்படுகிறது.

மாணவர்களுக்கான சாட்பாட்
திறந்தநிலைக் கற்றல் வழி பயிலும் மாணவர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதல், செயல்திறன் குறித்த நிகழ் நேரப் பின்னூட்டம், இலக்குகளை பரிந்துரைத்தல், பின்னடைவுகளை கண்டறிதல், அவற்றுக்கு பொருத்தமான வளங்களைப் பரிந்துரைத்தல் ஆகியவற்றைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வழங்கலாம். மாணவர்களின் கற்றல் ஈடுபாட்டுத் திறன், இடைநிற்றல் இடர் கணிப்பு, செயல்திறன் போக்குகள் ஆகியவற்றை அறிய இயந்திரக் கற்றல் முறை (Machine Learning) உதவுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow