திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உள்ளது. இத்தலத்துக்குத் தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி 5-வது நாளாக நேற்று பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
What's Your Reaction?