திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகையாற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பிரம்மாண்டமான குதிரை சிலையின் கால்களுக்கு இடையே காளியம்மன் வீற்றிருக்கிறாள்.

Jul 24, 2025 - 13:45
 0  4
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகையாற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பிரம்மாண்டமான குதிரை சிலையின் கால்களுக்கு இடையே காளியம்மன் வீற்றிருக்கிறாள். அம்மனின் இருபுறமும் பூத கணங்கள் உள்ளன. இங்கு விநாயகர், அடைக்கலம் காத்த அய்யனார் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். தல விருட்சமாக வேப்ப மரம் உள்ளது. பிரம்ம குண்டம், மணி கர்ணி தீர்த்தங்கள் உள்ளன.

பண்டைய காலத்தில் மதுரையை வெள்ளம் சூழ்ந்ததால், எல்லை அமைத்துத் தருமாறு சிவபெருமானிடம் மீனாட்சியம்மன் தெரிவித்தார். எல்லையைக் குறிக்கும் விதமாக மதுரையை சுற்றிலும் சிவபெருமான் பாம்பு வடிவில் வளைந்து நின்றார். பாம்பு தலையும், வாலும் சந்தித்த இடம் ‘படப்புரம்’ என்றாகி காலப்போக்கில் மருவி ‘மடப்புரம்’ ஆனது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow