திருப்பதி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா: ஹனுமன் வாகனத்தில் மலையப்பர் வீதியுலா
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் உற்வச மூர்த்தி மலையப்பர் எழுந்தருளினார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் உற்வச மூர்த்தி மலையப்பர் எழுந்தருளினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பர் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வாகன சேவையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
What's Your Reaction?