ரஷ்ய அதிபர் புதினுடன் ட்ரம்ப் பேச்சு: முடிவுக்கு வருமா உக்ரைன் போர்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடலின்போது உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

Nov 11, 2024 - 15:45
 0  3
ரஷ்ய அதிபர் புதினுடன் ட்ரம்ப் பேச்சு: முடிவுக்கு வருமா உக்ரைன் போர்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடலின்போது உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. புளோரிடாவில் உள்ள லாகோ எஸ்டேட்டில் இருந்து ட்ரம்ப், புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் 270 என்ற இலக்கு எளிதில் வசமாகிவிட்டது வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது. அவர் ஜனவரி 6-ம் தேதி அதிபராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து அவர் உலகத் தலைவர்கள் பலருடன் பேசி வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow