காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல்
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளதையடுத்து 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. இதற்கு பதிலாக, ஹமாஸின் பிடியில் உள்ள 5 தாய்லாந்து கைதிகள் உட்பட 8 பேரை அந்த அமைப்பினர் விடுதலை செய்கின்றனர்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது ஏராளமானோரை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதையடுத்து, இஸ்ரேல் காசாவில் நடத்திய பதிலடி தாக்குதலில் 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல மாதங்கள் நீடித்த கொடூரமான மற்றும் அழிவுகரமான இந்தப் போரால் 90 சதவீத காசா மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையி்ல், உலக நாடுகளின் உதவியால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, இருதரப்பிலும் பல கட்டங்களாக பிணைக் கைதிகள் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
What's Your Reaction?