வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை: சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு
இது வன்முறையாக மாறிய தையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

டாக்கா: வங்கதேசத்தில் பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறிய தையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இதையடுத்து, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ஐசிடி) ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ஹசீனா ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
What's Your Reaction?