திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் செப்.24-ல் தொடக்கம்

அன்று ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்​கை​யாக வழங்க உள்ளார். அன்​றிரவு பெரிய சேஷ வாக​னத்​தில் ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​மாக மலை​யப்​பர் வீதி​யுலா வரு​கிறார்.

Sep 2, 2025 - 10:00
 0  3
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் செப்.24-ல் தொடக்கம்

திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் இந்த ஆண்டு வரு​டாந்​திர பிரம்​மோற்​சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. அன்று ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பட்டு வஸ்​திரங்​களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்க உள்​ளார். அன்​றிரவு பெரிய சேஷ வாக​னத்​தில் ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​மாக மலை​யப்​பர் வீதி​யுலா வருகிறார்.

செப்​டம்​பர் 25-ம் தேதி காலை சின்ன சேஷ வாகன சேவை​யும், இரவு அன்ன வாகன சேவை​யும் நடை​பெற உள்​ளன. 26-ம் தேதி காலை சிம்ம வாக​னம், இரவு முத்​துப்​பல்​லக்கு வாக​னம், 27-ம் தேதி காலை கற்பக விருட்சக வாக​னம், இரவு சர்வ பூபால வாக​னம், 28-ம் தேதி காலை மோகினி அலங்​கார சேவை, இரவு கருடசேவை நிகழ்ச்​சிகள் நடை​பெற உள்​ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow