காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த பீடாதிபதியாக கணேச சர்மா டிராவிட் அறிவிப்பு

காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த பீடாதிபதியாக கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வரும் 30-ம் தேதி சன்யாச தீக்‌ஷயை காஞ்சி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கவுள்ளார்.

Apr 25, 2025 - 16:20
 0  5
காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த பீடாதிபதியாக கணேச சர்மா டிராவிட் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த பீடாதிபதியாக கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வரும் 30-ம் தேதி சன்யாச தீக்‌ஷயை காஞ்சி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கவுள்ளார்.

இது தொடர்பாக காஞ்சி சங்கர மட ஸ்ரீகார்யம் (மேலாளர்) சல்லா விஸ்வநாத சாஸ்திரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்தில் அட்சய திருதியை நாளில் (ஏப்.30, 2025) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா திராவிட்-டுக்கு சன்யாச தீக்‌ஷை வழங்குகிறார். இந்தப் புனித நிகழ்வு கிமு 482-இல் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரின் 2534 ஜெயந்தி மஹோத்ஸவத்துடன் (மே 2, 2025) ஒத்துப்போகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow