திருச்செந்தூர் மாசித் திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று (மார்ச் 3) தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று (மார்ச் 3) தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
What's Your Reaction?