மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்

கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில், கந்தசஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நாளை (அக்.22) தொடங்குகின்றன. நாளை  (22ம் தேதி) காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது. காலை 9.15 மணிக்கு கங்கனம் கட்டுதல் நடக்கிறது

Oct 21, 2025 - 20:25
 0  3
மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்

கோவை: கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நாளை (அக்.22) தொடங்குகின்றன.

நாளை (22ம் தேதி) காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது. காலை 9.15 மணிக்கு கங்கனம் கட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து நாளை முதல் வரும் அக்.28-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் யாக சாலை பூஜை, அபிஷேக பூஜை, சுவாமி திருவீதி உலா ஆகியவை நடக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow