திருச்செந்தூர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: ‘அரோகரா’ கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் முழங்கி கும்பாபி ஷேகத்தைக் கண்டுகளித்தனர்.

Jul 8, 2025 - 07:15
 0  4
திருச்செந்தூர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: ‘அரோகரா’ கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் முழங்கி கும்பாபி ஷேகத்தைக் கண்டுகளித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.100 கோடிக்கு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

பணிகள் நிறைவடைந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 26-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. ஜூலை 1-ம் தேதி மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின. கரியமாணிக்க விநாயகர், பார்வதி அம்மன், மூலவர் சுப்பிரமணியர், வள்ளி மற்றும் தெய்வானை அம்மனுக்கு கோயிலின் உட்புறம், தந்திரி சுப்பிரமணியரு தலைமையில் யாக பூஜைகள் நடைபெற்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow