திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தினோம். அதேபோல்தான் திருச்செந்தூரில் நடத்த முடிவெடுத்துள்ளோம் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

மதுரை: “திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தினோம். அதேபோல்தான் திருச்செந்தூரில் நடத்த முடிவெடுத்துள்ளோம்” என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூன் 18) ஆய்வு செய்தார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, கோயில் துணை ஆணையர் சூரியநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.
What's Your Reaction?