கார்த்திகை மாதம் தொடக்கம்: மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை முதல் நாளான நேற்று, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால், அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

சென்னை: கார்த்திகை முதல் நாளான நேற்று, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால், அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 15ம் தேதி மாலை நடை திறக்கப்பட்ட நிலையில், மண்டல பூஜை நேற்று தொடங்கியது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையின்போது சபரிமலை யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பக்தர்கள், கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், கார்த்திகை மாதம் நேற்று தொடங்கியது. இதையொட்டி, மாலை அணிவதற்காக ஏராளமான பக்தர்கள், ஐயப்பன் கோயில்களில் திரண்டனர்.
What's Your Reaction?