திருக்கழுக்குன்றம் | அதிகார நந்தி வாகனத்தின் மீது அருள்பாலித்த திரிபுரசுந்தரி அம்பாள்
திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோயிலில் தனி சந்நிதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தியின் மீது அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோயிலில் தனி சந்நிதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தியின் மீது அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் பிரசித்திப் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் அமைந்துள்ளது. இதில், தாழக்கோயில் எனப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.
What's Your Reaction?