திண்டுக்கல் மாவட்டத்தில் குறையும் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 17 கிராமங்களில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு 7 ஆக குறைந்தது. அரசின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 17 கிராமங்களில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு 7 ஆக குறைந்தது. அரசின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பாரம்பரியமாக உலகம்பட்டி, கொசவபட்டி, மறவபட்டி, புகையிலைப்பட்டி, நல்லம நாயக்கன்பட்டி, தவசிமடை, நத்த மாடிப்பட்டி, என்.அய்யாபட்டி, சொறிபாறைப்பட்டி, கே.ஆவாரம்பட்டி, ஏ.வெள்ளோடு, பி.கலையம்புத்தூர், அய்யம்பாளையம், பில்லம நாயக்கன்பட்டி, உலுப்பகுடி, ஆண்டிபட்டி, என்.கோவில்பட்டி ஆகிய 17 கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.
What's Your Reaction?