தலையில்லாத கிராமம்! | சினிப்பேச்சு

அழுத்தமான பொழுதுபோக்குக் கதைகள், ஆழமான உணர்வு நிரம்பிய கதாபாத்திரங்கள் என தேர்வு செய்து நடித்துவரும் கார்த்தியின் 29வது படமாக உருவாகிறது ‘மார்ஷல்’.

Jul 11, 2025 - 13:05
 0  4
தலையில்லாத கிராமம்! | சினிப்பேச்சு

அழுத்தமான பொழுதுபோக்குக் கதைகள், ஆழமான உணர்வு நிரம்பிய கதாபாத்திரங்கள் என தேர்வு செய்து நடித்துவரும் கார்த்தியின் 29வது படமாக உருவாகிறது ‘மார்ஷல்’. ’சார்தார் 2’ படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ‘டாணாக்காரன்’ படத்தின் மூலம் பேசப்பட்ட தமிழ் இயக்குகிறார்.

ராமேஸ்வரம் கடற்கரை கிராமம் ஒன்றில் நடக்கும் கதை. இன்று ராமேஸ்வரத்திலேயே படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருக்கும் நிலையில், படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டரை படக்குழு வெளியிட் டுள்ளது. அதில் கார்த்தியின் தலையில்லை. ஆனால், அவரது கடலோரக் கிராமத்தின் பின்னணி நன்கு விளங்குகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பவர் கல்யாணி பிரியதர்ஷன்! இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க சத்ய சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow