தம்பதிக்கிடையே ஒற்றுமை அருளும் கதித்தமலை முருகன் | ஞாயிறு தரிசனம்

அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப் பெருமான் தனிமையில் இருந்தார்.

May 11, 2025 - 07:10
 0  4
தம்பதிக்கிடையே ஒற்றுமை அருளும் கதித்தமலை முருகன் | ஞாயிறு தரிசனம்

மூலவர்: வெற்றி வேலாயுதன் அம்பாள்: வள்ளி, தெய்வானை தல வரலாறு: அகத்தியர், நாரதர், தேவர்கள் அனைவரும் முருகப் பெருமானை தரிசிக்கச் சென்றனர். அகத்தியர் ஓரிடத்தில் நின்று, முருகப் பெருமானுக்கு பூஜைகள் செய்ய நினைத்தார். ஆனால் பூஜைக்கு வேண்டிய நீர் கிடைக்கவில்லை. முருகப் பெருமானை வேண்டியதும், அவர் அகத்தியர் முன் தோன்றி, தன் வேலை தரையில் ஊன்றினார். நீர் பெருக்கெடுத்து ஓடியது. முருகப் பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றன. ஊற்றுக் குழியில் இருந்து நீர் பெருகியதால், இப்பகுதி ‘ஊத்துக்குளி’ என்று அழைக்கப்படுகிறது.

சிறப்பு அம்சம்: அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப் பெருமான் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய பெண்கள், அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாகவும் (தெய்வானை), நம்பிராஜனின் வளர்ப்பு மகளாகவும் (வள்ளி) அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னதான நிலை என்பதால் இவர்களுக்கு தனி சந்நிதி தரப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow