தமிழ்நாட்டின் நான்காவது உயிர்ப்பன்மை மரபுத் தலம் அறிவிப்பு

இதுவரை 118 வகையான பறவைகள், 138 தாவர இனங்கள், 71 பூச்சிகள், 5  எண்காலிகள், 11 ஊர்வன, 7 பாலூட்டிகள், 3 இதர பல்லுயிர்கள் என மொத்தம் 349 உயிரினங்கள் வாழ்வதாக சூழல் அறிவோம் குழுவால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

Oct 8, 2025 - 18:45
 0  4
தமிழ்நாட்டின் நான்காவது உயிர்ப்பன்மை மரபுத் தலம் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே அமைந்துள்ள நாகமலை குன்றை மாநிலத்தின் நான்காவது உயிர்ப்பன்மை மரபுத் தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நாகமலைக் குன்று செழிப்பான மலை அடிவாரக் காடு, வறண்ட இலையுதிர் காடு, முட்புதர் காடு, பாறைப் பகுதி, வறண்ட புல்வெளி, நன்னீர் சுனை எனச் செழிப்பான வாழ்விடங்களை கொண்டுள்ளது. நாகமலை குன்றில் உள்ள காட்டுப்பகுதியில் இதுவரை 118 வகையான பறவைகள், 138 தாவர இனங்கள், 71 பூச்சிகள், 5 எண்காலிகள், 11 ஊர்வன, 7 பாலூட்டிகள், 3 இதர பல்லுயிர்கள் என மொத்தம் 349 உயிரினங்கள் வாழ்வதாக சூழல் அறிவோம் குழுவால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு 21 உள்ளூர் பறவைகள் கூடமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow