மயில்களின் வண்ணமயமான மொழி | உயிரினங்களின் மொழி - 14

மயில்களின் கழுத்துப் பகுதி நீல-பச்சை நிறத்தில் இருக்கும். இந்த இறகுகளின் சிறப்பு அமைப்பு காரணமாக, ஒளியின் கோணத்தைப் பொறுத்து நிறம் மாறும் தன்மைகொண்டது. இது வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது நீலம், பச்சை, ஊதா போன்ற வண்ணங்களில் தெரியக்கூடும். மயில்கள் தங்கள் கழுத்து மற்றும் உடல் அசைவுகளைத் தகவல் தொடர்புக்குப்  பயன்படுத்துகின்றன.

Apr 18, 2025 - 21:05
 0  3
மயில்களின் வண்ணமயமான மொழி | உயிரினங்களின் மொழி - 14

இந்தியாவின் தேசியப் பறவையான மயில் தோகை விரித்தாடும் அழகில் மயங்காதவர் யாரும் இல்லை. தோகை விரிப்பு என்பது மயில்களின் தகவல் தொடர்பு. காட்டில் நடக்கும்போது திடீரென்று ’மே-ஆவ்’ என்று உரத்த அலறல் கேட்டால், அது பூனையல்ல மயில். கார்னெல் பறவையியல் ஆராய்ச்சியாளர்கள், அது ஒரு மயிலின் எச்சரிக்கை அழைப்பு என்கிறார்கள். ஆபத்து வரும்போது மயில்கள் ’கா-ஆன்’ போன்ற ஒலிகளை எழுப்புகின்றன.

மயில்களின் குரல் தொடர்பு பல்வேறு சூழல்களுக்கேற்ப மாறுபடுகிறது. தாய் மயில் தன் குஞ்சுகளுடன் உரையாட ’உக்’ அல்லது ’அன்’ என்கிற மென்மையான ஒலிகளைப் பயன்படுத்துகிறது. இது குஞ்சுகளைத் தன்னருகே அழைக்கவும், உணவு கிடைத்திருப்பதை அறிவிக்கவும் உதவுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow