தங்கம் விலை மீண்டும் ஒரு கிராம் ரூ.7000-ஐ கடந்தது

தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்று (நவ.19) மீண்டும் உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.1040 உயர்ந்துள்ளது.

Nov 19, 2024 - 12:40
 0  9
தங்கம் விலை மீண்டும் ஒரு கிராம் ரூ.7000-ஐ கடந்தது

சென்னை: தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்று (நவ.19) மீண்டும் உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.1040 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,065-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.56,520 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனையாகிறது. இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.1040 உயர்ந்துள்ளதால் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்திலேயே பயணிக்குமோ என்ற அச்சம் வாடிக்கையாளர்கள் மத்தியில், குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow