தொழில் தொடங்கும் எஸ்சி/எஸ்டி பெண்களுக்கு ரூ.2 கோடி வரை கடன்!

முதல் முறையாக தொழில் தொடங்கும்  எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த 5 லட்சம் பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 கோடி வரையிலான கடன் வழங்க ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Feb 1, 2025 - 17:50
 0  3
தொழில் தொடங்கும் எஸ்சி/எஸ்டி பெண்களுக்கு ரூ.2 கோடி வரை கடன்!

புதுடெல்லி: முதல் முறையாக தொழில் தொடங்கும் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த 5 லட்சம் பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 கோடி வரையிலான கடன் வழங்க ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2025 - 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் குறித்து பேசினார். அப்போது அவர், “வளர்ச்சியடைந்த இந்தியா என்னும் இலக்கை எட்ட அனைத்துப் பிராந்தியங்களும் சமன்பாடான வளர்ச்சியை அடைய வேண்டியது அவசியமாகும். குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதம் 5 கோடியிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow