டிஜிட்டல் டைரி 19: ஏட்டிக்குப் போட்டியாகும் ஏ.ஐ சேவைகள்
ஏ.ஐ சேவைகளை அவற்றின் வேகம், செயல்திறன், கட்டணம் ஆகிய மூன்று அம்சங்களில் ஒப்பிடப்பட்டது. இந்தச் சேவையைப் பயன்படுத்தும் பயனர்களின் மதிப்பீடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையிலும் சிறந்த சேவைகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.

வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) பரப்பில் சாட்பாட் சேவைகள் ஒரு வகை என்றால், கலைப் படைப்புகளை உருவாக்கும் ஏ.ஐ கருவிகள் இன்னொரு வகை. முதல் வகையின்கீழ் ‘சாட்-ஜிபிடி’, ‘கிளாடு’, ‘ஜெமினி’ போன்ற ஏ.ஐ சாட்பாட்கள் நிறைந்திருக்கின்றன. இந்தச் சேவைகளின் அடிப்படை அம்சம், எழுத்து வடிவிலான உள்ளீட்டிற்கு எழுத்து வடிவில் பதில் அளிக்கும் திறன்.
இரண்டாவது வகையில், ‘ஆர்ட் ஜெனரேட்டர்’ எனக் குறிப்பிடப்படும் கலைப் படைப்புகளை உருவாக்கும் கருவிகள், எழுத்து வடிவிலான உள்ளீட்டிற்கு ஏற்ப உருவங்கள் அல்லது காட்சி வடிவிலான ஆக்கங்களை உருவாக்கித் தருகின்றன. ‘மிட்ஜர்னி’, ‘ஸ்டேபில் டிப்யூஷன்’, ‘டேல்–இ’ போன்ற சேவைகள் இதில் முன்னணியில் இருக்கின்றன.
What's Your Reaction?