‘எக்ஸ்பிளைண்டு’ முதல் ‘பீரியட் வரை: ஓடிடி தொடர்கள் - ஒரு பார்வை
திரையரங்கத்துக்குச் சென்று திரைப்படம் பார்த்த காலம் மாறி ஓடிடியில் எப்போது திரைப்படங்கள் வெளியாகும் எனக் காத்திருக்கிற காலம் இது

திரையரங்கத்துக்குச் சென்று திரைப்படம் பார்த்த காலம் மாறி ஓடிடியில் எப்போது திரைப்படங்கள் வெளியாகும் எனக் காத்திருக்கிற காலம் இது. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு ‘ஓடிடி’ என்பது இணையத்தில் பரலாகப் பயன்படுத்தப்படும் வார்த்தையாக மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளிலேயே திரைப்படங்கள், ஆவணப்படங்கள், கல்வி சார்ந்த படங்கள் ஆகியவை வெவ்வேறு ‘ஓடிடி’ தளங்களில் வெளியாகின, இனியும் வெளியாக இருக்கின்றன. இப்படி மாணவர்களுக்குப் பயன் தரக்கூடிய, கல்வி சார்ந்த சுவாரசியமான ‘ஓடிடி’இல் வெளியான தொடர்கள் சில…
l ‘அவர் பிளானட்’ (Our Planet): உலகளாவிய இயற்கை நிதியம் (Worldwide fund for nature), பிரபல ஓடிடி தளமான ‘நெட்பிளிக்ஸுடன்’ இணைந்து ‘அவர் பிளானட்’ எனும் ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் காட்டுயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், புவி அடையும் மாற்றங்கள் குறித்தும் இந்த ஆவணப்படத்தில் பேசப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இப்படத்துக்கான காட்சிகளைப் படம்பிடித்துள்ளார் இயக்குநர் டேவிட் அட்டன்பரோ.
What's Your Reaction?