செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்க 3 நாட்கள் சிறப்பு மேளா!
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக சிறப்பு மேளா வரும், 21, 28 மற்றும் மார்ச்,10ம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே, இத்திட்டத்தின் கீழ், இதுவரை 10 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக சிறப்பு மேளா வரும், 21, 28 மற்றும் மார்ச்,10-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே, இத்திட்டத்தின் கீழ், இதுவரை 10 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
அஞ்சல்துறை சார்பில் சுகன்யா சம்ரித்தி எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் நலனுக்காக, 2015-ம் ஆண்டு, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு வசதியாக, வரும், 21, 28 மற்றும் மார்ச், 10 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு மேளாக்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக, அஞ்சலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்படும். சென்னை நகர அஞ்சல் மண்டலத்தின் கீழ் சென்னை, அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஆகியவை அடங்கும்.
What's Your Reaction?