சென்னையின் யூத் ஸ்பாட்ஸ் | ஆக.22 சென்னை நாள்

சென்னையில் கடற்கரை, தியேட்டர்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் என இளைஞர்கள் சந்திக்கும் இடங்கள் எல்லாம் மலையேறிவிட்டன.

Aug 22, 2025 - 12:45
 0  3
சென்னையின் யூத் ஸ்பாட்ஸ் | ஆக.22 சென்னை நாள்

சென்னையில் கடற்கரை, தியேட்டர்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் என இளைஞர்கள் சந்திக்கும் இடங்கள் எல்லாம் மலையேறிவிட்டன. இப்போது இளைஞர்கள் சந்திக்க வேண்டும், ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று யோசித்தாலே நீண்டுகொண்டே செல்லும் மால்கள் தொடங்கி விதவிதமான காபி ஷாப்கள், ரிசார்ட்டுகள், தீம் பார்க்குகள், மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள், பைக்குகள் சீறிச் செல்லும் ஈ.சி.ஆர். சாலை போன்றவற்றைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஏசி மால்களில் உலா: சென்னை மெரினா கடற்கரை அந்தக் காலம் முதலே சந்திப்புகளுக்கான முக்கிய இடமாக இருந்துவருகிறது. இப்போதும் இளைஞர்களின் சந்திக்கத் திட்டமிடும் இடங்களில் மெரினா, பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை போன்றவை இருந்தாலும், முன்புபோல மணிக்கணக்கில் இளைஞர்கள் அங்கே ஒன்றுகூடி அரட்டையடிக்க விரும்புவதில்லை. இளைஞர்கள் அங்கே நீண்ட நேரம் இருக்க காவலர்களும் விடுவதில்லை. எனவே, அந்த இடங்களைப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்கள் கைப்பற்றிவிட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow