சிறு, குறு, நடுத்தர தொழில் துறையால் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: எம்எஸ்எம்இ துறை செயலர் தகவல்

சிறு​தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) சார்​பில், எம்எஸ்​எம்இ நிறு​வனங்​களுக்கான வங்கிக் கடன் குறித்த விழிப்பு​ணர்வு நிகழ்ச்சி சென்னை​யில் நடைபெற்​றது.

Nov 29, 2024 - 05:25
 0  3
சிறு, குறு, நடுத்தர தொழில் துறையால் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: எம்எஸ்எம்இ துறை செயலர் தகவல்

சென்னை: சிறு​தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) சார்​பில், எம்எஸ்​எம்இ நிறு​வனங்​களுக்கான வங்கிக் கடன் குறித்த விழிப்பு​ணர்வு நிகழ்ச்சி சென்னை​யில் நடைபெற்​றது. வங்கி​யின் பொது​மேலாளர் மற்றும் மண்டல தலைவர் பி.பிர​வீன் குமார் வரவேற்​புரை ஆற்றினார். தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலர் அதுல் ஆனந்த் நிகழ்ச்​சி​யில் சிறப்பு விருந்​தினராக பங்கேற்று பேசி​ய​தாவது: உலக அளவில் இன்றைக்கு பல்வேறு மாற்​றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உதாரண​மாக, ஐரோப்பிய சந்தை​யில் கார்​பன்டை ஆக்சைடு மாசுவை குறைக்க வேண்​டும் என்ற விதிக்கு ஏற்ப எம்எஸ்​எம்இ நிறு​வனங்கள் எத்தகைய தொழில்​நுட்​பங்களை பயன்​படுத்தி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்​டும் என்பன உள்ளிட்ட பல்வேறு சவால்கள் உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்​த​படியாக தமிழகம் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக திகழ்​கிறது. உற்பத்தி துறை​யில் எம்எஸ்​எம்இ துறை​யின் பங்கு 45 சதவீதமாக உள்ளது. கிளஸ்​டர்கள் அமைப்​ப​தற்கு ஊக்கம் அளிக்​கப்​பட்டு வரப்​படு​கிறது. குறிப்​பாக, மூலதன மானி​யம், வட்டி மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்​கப்​பட்டு வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow