லெபனானைத் தொடர்ந்து காசாவிலும் விரைவில் போர் நிறுத்தம்: ஜனவரிக்குள் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை

அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம் முடிவதற்குள், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Nov 29, 2024 - 05:15
 0  4
லெபனானைத் தொடர்ந்து காசாவிலும் விரைவில் போர் நிறுத்தம்: ஜனவரிக்குள் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை

வாஷிங்டன்: அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம் முடிவதற்குள், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. காசா பகுதி​யில் இதுவரை 44,282 பேர் உயிரிழந்​துள்ளனர். ஒரு லட்சத்​துக்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​துள்ளனர். இந்த சூழலில் எகிப்து அரசின் சமரசத்
​தின் ​பேரில் இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்​தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வருகிறது. இதுதொடர்பாக எகிப்து அரசின் உயர்​நிலைக் குழு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நேற்று முக்கிய பேச்சு​வார்த்​தை நடத்​தி​யது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow