சிரியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க கிளர்ச்சியாளர்களுக்கு பிரதமர் முகம்மது ஜலாலி ஆதரவு

சிரியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க கிளர்ச்சியாளர்களுக்கு பிரதமர் முகம்மது ஜலாலி, துணை அதிபர் ஃபைசல் மேக்தாத் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Dec 10, 2024 - 14:50
 0  3
சிரியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க கிளர்ச்சியாளர்களுக்கு பிரதமர் முகம்மது ஜலாலி ஆதரவு

டமாஸ்கஸ்: சிரியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க கிளர்ச்சியாளர்களுக்கு பிரதமர் முகம்மது ஜலாலி, துணை அதிபர் ஃபைசல் மேக்தாத் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிளர்ச்சியாளர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க ஒப்புதல்: சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் படை தலைநகரை கைப்பற்றியதை அடுத்து தற்போது அங்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளர்ச்சிப் படையின் முக்கிய தலைவர் அகமது அல் ஷாரா எனும் அபு முகம்மது அல் கொலானி, பிரதமர் முகம்மது ஜலாலி மற்றும் துணை அதிபர் ஃபைசல் மேக்தாத் ஆகியோரை இது தொடர்பாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க ஒப்புக்கொண்ட ஜலாலி ஆட்சி மாற்றம் நிறைவடைய சில நாட்கள் ஆகும் என கூறியதாகக் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow