ஸ்விஸ் எனும் சொர்க்கம் 27: போர் கொடுமைகளின் சாட்சி
ஜெனீவாவில் பார்க்க வேண்டிய மற்றோர் இடம் செஞ்சிலுவைச் சங்க அருங்காட்சியகம். ஐ.நா. அலுவலகத்திலிருந்து இது தூரமில்லை.

ஜெனீவாவில் பார்க்க வேண்டிய மற்றோர் இடம் செஞ்சிலுவைச் சங்க அருங்காட்சியகம். ஐ.நா. அலுவலகத்திலிருந்து இது அதிக தூரமில்லை. காலை பத்து மணியில் இருந்து மாலை ஆறு மணி வரை இந்த அருங்காட்சியகம் இயங்குகிறது. வியாழக் கிழமைகளில் மட்டும் இரவு பத்து மணி வரை திறந்திருக்கும். நிரந்தரக் கண்காட்சி, தற்காலிகக் கண்காட்சி என இரண்டு வகைக் கண்காட்சிகளை வெவ்வேறு தளங்களில் பார்க்கலாம். தற்காலிகக் கண்காட்சியின் பொருள் அவ்வப்போது மாறிக் கொண்டேயிருக்கும்.
இரண்டு விதக் கண்காட்சிகளுக்கும் தனித் தனியான கட்டணங்கள். நிரந்தரக் கண்காட்சியைக் காண அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
What's Your Reaction?