சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி - ஏற்றுமதி வரியை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
அதிக விளைச்சல் மற்றும் விற்பனை வாய்ப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் நிகழாண்டு தமிழகம் முழுவதும் சின்ன வெங்காய ம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

அதிக விளைச்சல் மற்றும் விற்பனை வாய்ப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் நிகழாண்டு தமிழகம் முழுவதும் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த சின்ன வெங்காயம் கடந்த சில ஆண்டுகளான கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் பயிரிடப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
What's Your Reaction?