சொட்டு நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களால் தெரு நாய்கள் அச்சம் - ஓசூரில் புதிய முயற்சிக்கு பலன்

ஓசூரில் அதிகரித்து வரும் தெரு நாய்களின் தொல்லைகளில் இருந்து தப்பிக்க வீடுகளின் முன்பு சொட்டு நீலம் கலந்த தண்ணீர் பாட்டில் களை பொது மக்கள் அடுக்கி வருகின்றனர்

Sep 19, 2025 - 14:35
 0  3
சொட்டு நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களால் தெரு நாய்கள் அச்சம் - ஓசூரில் புதிய முயற்சிக்கு பலன்

ஓசூரில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க வீடுகளின் முன்பு சொட்டு நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களை பொதுமக்கள் அடுக்கி வருகின்றனர்.

ஓசூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 45 வார்டுகளிலும் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை துரத்தி கடித்து வருவதோடு, இருசக்கர வாகனங்கள் செல்லும் போது சாலையில் குறுக்கிடுவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. காலை நேரத்தில் நடைபயிற்சி செல்லும் முதியவர்கள் மற்றும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளும் அண்மைக் காலமாக தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow