இந்தியாவின் ஆகஸ்ட் மாத ஏற்றுமதி 9% அதிகரிப்பு, இறக்குமதி 7% சரிவு

இந்தியாவின் கடந்த மாத ஏற்றுமதி 9% அதிகரித்துள்ளது, இறக்குமதி 7% குறைந்துள்ளது, வர்த்தக பற்றாக்குறை 9.88 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது. 

Sep 15, 2025 - 19:35
 0  2
இந்தியாவின் ஆகஸ்ட் மாத ஏற்றுமதி 9% அதிகரிப்பு, இறக்குமதி 7% சரிவு

புதுடெல்லி: இந்தியாவின் கடந்த மாத ஏற்றுமதி 9% அதிகரித்துள்ளது, இறக்குமதி 7% குறைந்துள்ளது, வர்த்தக பற்றாக்குறை 9.88 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், நாடு சீரான வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அதன் விவரம்: கடந்த ஆகஸ்ட் 2025-ல் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருட்கள் மற்றும் சேவையின் ஏற்றுமதி மதிப்பு 69.16 பில்லியன் அமெரிக்க டாலர். ஆகஸ்ட் 2024ல் நாட்டின் ஒட்டுமொத்த பொருட்கள் மற்றும் சேவையின் ஏற்றுமதி மதிப்பு 63.25 பில்லியன் டாலராக இருந்தது. அந்த வகையில், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ஏற்றுமதி 9.34% வளர்ச்சி கண்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow