கோடை மழை தாக்கம்: தமிழகத்தில் 3,500 மெகாவாட் குறைந்த தினசரி மின் தேவை!
தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான கோடை மழை காரணமாக, தினசரி மின்நுகர்வு 3,500 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது.

சென்னை: தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான கோடை மழை காரணமாக, தினசரி மின்நுகர்வு 3 ,500 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது.
தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்தும், கோடைக்காலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்தும் காணப்படும். கடந்த ஆண்டு மே 2-ம் தேதியன்று தினசரி மின் தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக இருந்து வருகிறது.
What's Your Reaction?