சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்
உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்று விழா நடந்தது.

கடலூர்: உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்று விழா நடந்தது. வரும் 12-ம் தேதி ஞாயிற்றுகிழமை தேர் திருவிழாவும், 13-ம் தேதி திங்கள்கிழமை மார்கழி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது.
சைவத் திருத்தலங்களின் முதன்மையான சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஆகிய இருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் இன்று (ஜன.4) காலை 6.15 மணியில் இருந்து 7 மணி வரை நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் சிவராஜ தீட்சதர், மேளதாளங்கள் முழங்க தேவாரம் திருவாசகம் ஓதிட, வேத மந்திரங்கள் முழங்கிட கோயில் கொடிமரத்தில் கொடியேற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்சமூர்த்தி கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்தது.
What's Your Reaction?