சிதம்பரம் நடராஜர் கோயிலில் 14 நாடுகளைச் சேர்ந்த அயலக தமிழர்கள் சாமி தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோயிலை 14 நாடுகளைச் சேர்ந்த அயலக தமிழர்கள் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலை 14 நாடுகளைச் சேர்ந்த அயலக தமிழர்கள் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பிரான்ஸ் ஜெர்மன், மலேசியா, கன்னடா, மியான்மர், இலங்கை, ஃபிஜி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 அயலக தமிழர்கள் இன்று (ஆக.4) காலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பேருந்து மூன்றில் சிதம்பரம் வந்தனர். பின்னர் அவர்கள் நடராஜர் கோயிலுக்குச் சென்றனர். அங்கே, கோயில் கட்டிடக் கலைகள், சிற்பங்களைப் பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
What's Your Reaction?