சர்க்கரை நோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுப்பது எப்படி?

சர்க்கரை ரெட்டினோபதிரத்தத்தில் தொடர்ந்து சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் நிலையில், பார்வைக்கு உரிய விழித்திரையில் (Retina) சிறிய ரத்த நாளங்களில் சேதம் ஏற்படுவதால், திரவம் மற்றும் ரத்தக்கசிவு உண்டாகும்.

Nov 14, 2024 - 17:10
 0  5
சர்க்கரை நோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுப்பது எப்படி?

கோவை: இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ரெட்டினோபதி (சர்க்கரை நோய் கண்பாதிப்பு) பார்வை இழப்பிற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்பாடாக வைத்திருத்தல், முறையான கண் பரிசோதனை சிகிச்சை மூலம் பார்வை இழப்பைத் தடுக்கலாம் என கண் மருத்துவர் என்.சத்யன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில் 2025-ல் மூன்றில் ஒரு பகுதி சர்க்கரை நோய் உள்ளவர்கள், கண் பாதிப்பால் கட்டாயமாக அவதிப்படுகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, கண்பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். சர்க்கரை நோயால் பாதிப்பு ஏற்படும் கண் நோய்களின் தொகுப்பு 'சர்க்கரை கண் நோய்' என அழைக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow